சிட்பண்ட் மூலம் ரூ.4,000 கோடி மோசடி செய்த 5 பேருக்கு 250 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மத்திய பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
20 மாநிலங்களில் 35 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்களிடம் ரூ.4,000 கோடி மோசடி செய்த சிட் ஃபண்ட் இயக்குநருக்கு 250 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள செஹோர் மாவட்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே மிக நீண்ட சிறைத்தண்டனை இது என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பாலாசாகேப் பாப்கர் சாய் பிரசாத் குழும நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவருடன் தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நவம்பர் 17, 2009 முதல் மார்ச் 13, 2016 வரை கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சிட் ஃபண்டில் சேர்ந்தால் 5 ஆண்டுகளில் அவர்களின் பணத்தை இரட்டிப்பாக்குவதாக நிறுவனம் உறுதியளித்தது. குற்றவாளி பாப்கர் ஒரு பால் விற்பனையாளராக இருந்தார், பின்னர் நூற்றுக்கணக்கான பெண்களுடன் ஊறுகாய், பப்பாளி மற்றும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நடத்தினார். ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலம் 18% ஆண்டு வருமானம் தருவதாக உறுதியளித்து முதலீடுகளைப் பெற்றுள்ளார். ஆனால், கட்டுமானத் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்ற தகவல் பரவியதால் 20 மாநிலங்களைச் சேர்ந்த பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 4 நிறுவனங்களை முடக்கி வைக்குமாறு அதன் இயக்குனர் சாய் பிரசாத்துக்கு செபி உத்தரவிட்டபோது, அவர் புதிய நிறுவனங்களை நிறுவி பணத்தை திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்தது.
பெட்ரோலியம், கட்டுமானம் முதல் எரிசக்தி வரையிலான 23 துறைகளில் இந்தத் திட்டத்தில் முதலீடுகள் உள்ளன. ஏமாற்றப்பட்ட 300 முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த வருமானத்தை வழங்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில், மும்பை போலீசார் நான்கு குழும நிறுவனங்களின் இயக்குனர் சாய் பிரசாத்தை 2020ல் கைது செய்தனர். பாப்கர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதலீட்டாளர்களின் நலன் பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420, 409 மற்றும் 120பி ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
Please Fallow : Google News
Please Fallow : Telegram