வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த செஞ்சி கிராமத்தில் 40 ஆவது ஆண்டாக காளைவிடும் திருவிழாவானது நடைபெற்றது. இதில் வேலூர் திருப்பத்தூர், ஆம்பூர் குடியாத்தம் ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து ஓடியது.
இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆரவாரத்துடன் காளை பாய்ந்து ஓடியதை பார்த்து மகிழ்ந்தனர்.குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
https://www.dinavel.com/what-is-the-reason-for-court-order-to-arrest-famous-actress-yashika-anand/
நான் ஐஸ்வர்யாவின் பினாமி.!! ஈஸ்வரி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
இதில் முதல் பரிசு பெறும் காளைக்கு ரூ.1 லட்சம் பரிசும்,இரண்டாவதாக வந்த காளைக்கு ரூ.80 ஆயிரமும் மூன்றாவதாக வந்த காளைக்கு ரூ.70 ஆயிரமும் பின்னர் வந்த 50 காளைகளுக்கு பல்வேறு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது.
காலைவிடும் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்களும் உற்சாகத்துடன் இந்த காளைவிடும் திருவிழாவினை பார்த்து ரசித்தனர்.