வேலூர் மாநகராட்சியில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோக பணியை மெய்ஸஸ் ஸ்ரீராகவேந்திரா என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகி றது. இவர்கள். 34 தினக்கூலி ஒப்பந்த பணியாளர்கள் மூலம் குடிநீர் விநியோக பணியை மேற் கொண்டு வந்தனர். இதற்கான தொகை மாநகராட்சி மூலம் தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் கள் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த ஆண்டில் 4 மாதங்கள் வேலை செய்ததற்கான சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத் துள்ளனர்.
வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் :
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் விநியோக தினக்கூலி ஒப்பந்த பணியாளர்கள் புகார் அளித்த நிலையில், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில்நேற்று மாலை புகாரும் அளித்த னர், அதில், “நாங்கள் மூன்றாவது மண்டலத்தில் குடிநீர் விநியோக பணியில் ஒப்பந்த அடிப்படையில் 34 பேர் ஈடுபட்டு வருகின்றோம்.
எங்களுக்கான சம்பளம் மாதந்தோறும் வழங்க வேண்டும்..
ஆனால், ஒப்பந்ததாரரான மெய்ஸஸ் ராகவேந்திரா நிறுவனர் பாலாஜி என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் சம்பளம் வழங்கிய நிலையில் எங்களுக்கு மட்டும் வழங்கவில்லை. சம்பளம் இல்லாததால் எங்களால் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. எனவே ஒப்பந்ததராரிடம் இருந்துளங்களுக்கு சேரவேண்டிய சம்பள பணத்தை பெற்றுத்தர வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.