திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அருள்மணிகண்டன், பிரியதர்ஷினி.கணவர் அருள் மணிகண்டன் 2009 ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி விஜி ஆகியோர் பிரியதர்ஷினிக்கு அறிமுகம் ஆகியுள்ளனர்.
தனது கணவர் அருள் மணிகண்டன் நிலை குறித்து ஜோதிடர் சந்திரசேகரனிடம் கூறி அதற்கு ஜோதிடர் தங்களது கணவருக்கு நேரம் சரி இல்லைதான், மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும் மேலும் தனது வீட்டில் வைத்து பில்லி சூனியம், நடுநிசி பூஜை, மலையாள குருபூஜை மாந்திரீக பூஜைகள் நடத்தினால் குணமடைந்து விடுவார் எனக் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பிரியதர்ஷினி ஜோதிட சந்திரசேகரனுக்கு 65 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தும் ஆண்டுகள் முன்னேற்றம் இல்லை என்றவுடன் ஜோதிடர் சந்திரசேகர் இடம் கேட்டதற்கு ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் பிரியதர்ஷினி தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் ஜோதிடர் சந்திரசேகரன் அவரது மனைவி விஜி மற்றும் கார் ஓட்டுனர் ஆனந்தன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் மூவரும் கூட்டு சேர்ந்து பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து ஜோதிட சந்திரசேகரன் அவரது மனைவி விஜய் மற்றும் கார் ஓட்டுநர் ஆனந்தன் ஆகியோரை சிறையில் அடைப்பதற்கான பணியில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாந்திரீக பூஜை மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட வரை குணப்படுத்துவதாக கூறி 65 லட்சம் மோசடி செய்ததில் தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.