குடியாத்தம் நகராட்சி அதிகாரியின் அலட்சியப் போக்கால் கொழுந்துவிட்டு எரியும் குப்பை குடோன்- புகை மூட்டமாக மாறிய நகரம் – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகள் கொண்ட நகராட்சி இந்த நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகள் அனைத்தும் சுண்ணாம்புபேட்டை பகுதியில் உள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றாங்கரையோரம் கொட்டப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் கடந்த சில மாதங்களாக குப்பைகளை தரம் பிரிக்காமல் அங்கே சேகரிக்கப்பட்டு வந்த நிலையில் நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றன.
மூச்சுத் திணறல் மற்றும் நோய் தொற்றும் அபாயம் :
இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்தது அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு குப்பை கிடங்கு ஏறியும் புகையால் மூச்சுத் திணறல் மற்றும் நோய் தொற்றும் அபாயம் ஏற்படுவதாகவும் தினந்தோறும் குடியாத்தம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவ்வப்போது தீ வைத்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத்துறையினர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே குடியாத்தம் நகராட்சி ஊழியர்கள் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரித்து குப்பைகளை எடுக்க நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.