பாச்சலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலையை சார்ந்த பாச்சலூர் ஊராட்சி சேர்ந்த பூதமலை கிராமத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சேவா பாரத் தொண்டு நிறுவன சார்பில் இங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் காய்கறி விதைகள் மற்றும் கனி தரும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சேவா பாரத் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் ரெட்டி தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் காட்சன் முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் மாவட்ட செயலாளர் ஹெரால்டு ஜாக்சன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இங்கு வசிக்கும் எல்லா மக்களுக்கும் காய்கறி விதைகள் மற்றும் மாதுளை செடிகள், எலுமிச்சம் செடிகள் மற்றும் கொய்யா செடிகளை வழங்கினார்கள்.