கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மேல் கூரை சிமெண்ட் பெயர்ந்து குழந்தை தலையில் விழுந்ததால் பலத்த காயம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சார்ந்த குமார் மகள் சபிஷ்னா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளி வகுப்பறையில் உள்ள மேற்கூரை உடைந்து தலையில் விழுந்ததால் பலத்த காயமடைந்து நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதால்.ஆத்திரமடைந்த பெற்றோர்கள் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி அரசு பள்ளியை முற்றுகையற்றனர் இதனால் பரபரப்பு ஏற்படுது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் தஸ்விதாவை முற்றுகையிட்டு பல மனுக்கள் கொடுத்திருந்தோம் ஏன் புதிய கட்டடம் கட்டவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.விரைந்து வந்த காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி புதிய கட்டிடம் கட்டித் தருவதாக கூறியது தொடர்ந்து ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு தரமான கட்டிட பாதுகாப்பு தரவில்லை,வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றவர்கள் எப்படி முன் வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர் இதை செவி சாய்த்து உடனடியாக தமிழக அரசு புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித் தருமா என மக்கள் எதிர்பார்ப்புடன் கலைந்து சென்றனர்.