சேலம் மாவட்டம்
வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, சீர்கா பாடி, வேம்படிதளம், பெருமாள் கவுண்டம்பட்டி இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ. 27.92 லட்சம் மதிப்பீட்டில் சமையலறையுடன் கூடிய வகுப்பறை கட்டிடங்களை சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும்,சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலாசேகர் அவர்களும் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகரில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒரு கால பூஜை திட்டத்தில் திருக்கோவில்களுக்கு விலையில்லா மாடுகள்
சேலம் மாநகரில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒரு கால பூஜை திட்டத்தில் திருக்கோவில்களுக்கு விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், சேலம் அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயிலுக்கு 8 மாடுகள் பூசாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சியில் நடைப்பெற்றது. இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் இரா. ராஜேந்திரன் கலந்து மாடுகள் வழங்கினார்.
மேலும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்
உடன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவரும், சோனா குழுமங்களின் தலைவருமான வள்ளியப்பா, அறங்காவலர்கள் தம்பிதுரை, லதா சேகர், அன்புமணி, தங்கதுரை மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.