திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கேதையுறும்பு பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மகள் கார்த்திகாஜோதி வயது 19. இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சக்தி கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார்
இவர் இன்று வகுப்புக்கு செல்லாமல் 3-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். உடனே சக மாணவிகள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் ஒட்டன்சத்திரம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : ச. நிர்மல்குமார்