தாராபுரத்தில்,பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட உழவர் உழைப்பாளி கட்சித் தலைவர் தலைமையில் பாலை ரோட்டில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம். தாராபுரத்தில்,பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில்,பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட உழவர் உழைப்பாளி கட்சித் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் பாலை ரோட்டில் ஊற்றி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து,கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் காளிமுத்து கூறுகையில், ஆவின் நிறுவனத்திற்க்கு பால் வழங்கி வரும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மாட்டு தீவனம்,பருத்தி கொட்டை, புண்ணாக்கு,தவிடு, உள்ளிட்ட மாடுகளுக்கு அளிக்கும் அத்தியாவசிய பொருட்களின், கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் ஆவின் நிறுவனம் விவசாய்களிடம் பால் கொள்முதல் செய்யும் விலை மிகவும் குறைவு.உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பால் வள துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தி எந்த ஒரு பயனும் இல்லை.எனவே தமிழக அரசு உடனடியாக ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஒன்றினைந்து ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்துவோம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க சார்பாக தளவாய் ரத்தினம் மற்றும் பால் உற்பத்தியாளர் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்