கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த சின்னக் கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழா நடைபெற்றது. விழாவிற்கு ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர் பழனி முத்து, ஆசிரியர் பயிற்றுநர் முத்து ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசினார்.
இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராசாத்தி, துணைத் தலைவர் கவிதா, கல்வியாளர் வெங்கடேசன் மற்றும் இதர உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள், 1 முதல் 3 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் பங்கு பெற்று சிறப்பாக நடனம், பாடல் பாடிய மாணவர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் பழனிச்சாமி, உதவி ஆசிரியர் பிரிஸ்கில்லாள் அன்ன புஷ்பம் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
அதேபோல், ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞான சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்,
இதில், ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர் மோகன் சௌந்தரராஜன், ஆசிரியர் பயிற்றுனர் பால்தாஸ், இடைநிலை ஆசிரியர் மகேந்திரா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.