வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் 67ஆம் ஆண்டு மஹா சிவராத்திரியை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் வேலூர், ரணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றன.
குறிப்பிட்ட இலக்கினை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1,00,000 ,இரண்டாம் பரிசாக 66,666 ரூபாயும் ,மூன்றாம் பரிசாக 55,555 என 60 பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகள் முட்டியத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அங்கு முதலுதவி சிகிச்சை என்னை மருத்துவர்கள் அளித்தனர்
எருது விடும் திருவிழாவில் அசம்பாவிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க காட்பாடி டிஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.