வேலூர் நாராயணி மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த ஒருவரின் கல்லீரல் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது
வேலூர்மாவட்டம்,அரியூரில் தங்ககோவில் சார்பில் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தப்படுகிறது இந்த மருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் சிகிச்சை அளித்து வருகிறது தற்போதுமுதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் துவங்கியுள்ளனர் சென்னையில் விபத்து ஒன்றில் சிக்கிய ரேபி (41) ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் ஆனால் அவர் அங்கு மூளைசாவடைந்தார் அவரது கல்லீரல் நாராயணி மருத்துவமனையில் சேலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமி (48) என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.
இந்த கல்லீரல் போரூர் ராமசந்திரா மருத்துவமனையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் 2 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து வருகிறது இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரையில் செலவாகிறது இதில் 20 சதவிகிதம் மட்டுமே நோயாளியிடம் வசூலிக்கபடுகிறது மீதமுள்ள தொகை தங்ககோவில் நாராயணி அறக்கட்டளை சார்பில் செலுத்தப்படு சிகிச்சை அளிக்கபடுகிறது வருங்காலத்தில் இருதய மாற்று அறுவை சிகிச்சையும் இங்கு செய்யபடவுள்ளது முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது .
இதுகுறித்து நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏற்கனவே நாங்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறோம் தற்போது இங்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யபடுகிறது இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள் இருதய மாற்று அறுவை சிகிச்சையும் முதல்வர் காப்பீட்டில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்