திருவள்ளூர் மார்ச்.2
மீஞ்சூர் ஒன்றிய அளவிளலான அங்கன்வாடிகளில் தமிழக அரசின் புதிய திட்டமான மூன்று வகைகளிலான சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் அரியன் வாயல் அங்கன்வாடியில் துவக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஊட்டசத்து குறைபாடு இல்லாத தமிழகம் உருவாக்கும் வகையில் மூன்று வகையான சத்துமாவுகள் குறிப்பாக குழந்தைகள்,கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்களிக்கு தனித்தனியாக அங்கன் வாடிகள் மூலம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதன் அடிப்படையில் மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன் வாயல் அங்கன்வாடியில் இதன் துவக்க விழா நடைபெற்றது.மீஞ்சூர் வட்டார ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா தலைமை தாங்கினார்.அங்கன் வாடி பணியாளர் ரகுமாபி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் வார்டு உறுப்பினர் அபுபக்கர் தலைமை ஆசிரியர் மாலா கிராம நிர்வாக அதிகாரி சாந்தி. மீஞ்சூர் தொகுதி மேற்பார்வையாளர் சசிகலா கிராம சுகாதார செவிலியர் ஸ்டெல்லா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரிய வழிகாட்டுதல்களை வழிங்கினர்.பின்னர் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பெட்டகமும் குழந்தைகள் கர்பிபினிப்பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவும் வழங்கப்பட்டது.இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப்பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.