கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 2023 -2024 ஆம் ஆண்டிற்கான வட பொன் பரப்பி கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் வட பொன் பரப்பி ஊராட்சி மன்ற தலைவர் தங்க சிவமலை தலைமையில் துணைத் தலைவர் ரேணு முன்னிலையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு கிராம சபை
கூட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் 17,000 மரக்கன்றுகள் ஊராட்சி மன்ற தலைவர் தங்க சிவமலை பொறுக்கரங்களால் நடப்பட்டது. மேலும்,இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வட பொன் பரப்பி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் திட்ட அலுவலர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி கிராம சபை பற்றாளர் சத்யா, கால்நடை உதவி மருத்துவர் நவீன் குமார், ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து செயலாளர் ராமச்சந்திரன், துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்( வணிகம்) ஆர். மணிகண்டன், ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்தோபர், (மக்கள் தேடி மருத்துவம்) இடைநிலை சுகாதார பணியாளர்.
ஷாகின், ஆஷா ஊழியர் ஜெசிந்தா மேரி, அங்கன்வாடி பணியாளர்கள் ராணி, ஆரோக்கியம்மாள், மகளிர் திட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி, மகளிர் குழு கண்காணிப்பாளர் சங்கீதா, மகளிர் சுய உதவி கணக்காளர் செல்வி, வட பொன்பரப்பி கிராமத்தின் வார்டு உறுப்பினர்கள் சுப்பிரமணி, பானு, ஜாக்குலின் மேரி, பிரபு லட்சுமி, சம்சாத், ஹஜரத் தாஜும், அமுதா மற்றும் வடபொன்பரப்பி ஊராட்சி ஒன்றியத்தின் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.