வேலூர் மாவட்டம் வள்ளிமலை அடுத்த பெரியகீசுகுப்பம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது இப்பகுதியில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிச்சதத்தம் கேட்டுள்ளது சம்பவ இடத்திற்கு விரைந்த பெரிய கிசு குப்பம் கிராம இளைஞர்கள் நாய் ஒன்று சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததை பார்த்த இளைஞர்கள் மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் பொன்னை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் எஸ் ஐ செல்வராஜ், எஸ்ஐ ஆனந்தகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் .
இதில் காட்டுப் பன்றிகளுக்கு வைக்கும் நாட்டு வெடி குண்டு கடித்து தெரு நாய் தலை சிதறி பலியாகி இருந்தது பின்னர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்கள் காட்டு பன்றிகளுக்கு வைப்பதற்காக நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்து வைத்திருந்த அட்டைப்பெட்டியை தெரு நாய் இழுத்து வந்து சாலையோரம் நாட்டு வெடிகுண்டு கடித்துள்ளது இதில் நாய் தலை சிதறி பலியாகி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் வினோத்குமார், ஜீவன்யா ஆகியோர் வரவழைக்கப்பட்டு நாய்க்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர் இதில் வெடிகுண்டு கடித்ததில் தெரு நாய் தலை சீதறி உயிரிழந்ததை உறுதி செய்தனர் பின்னர் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகளை ஆய்வு செய்தனர் இதில் காட்டுப்பன்றிகளுக்கு வைக்கும் நாட்டு வெடிகுண்டுகளை மனமா நபர்கள் தயார் செய்து வைத்திருந்த பெட்டியை நாய் இழுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதன்பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்ஐக்கள் குமரன், தண்டபாணி உள்ளிட்ட வெடிகுண்டு நிபுணர் குழு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர் மேலும் நாட்டு வெடிகுண்டை கடித்து நாய் தலை சிதறி பலியான சம்பவம் வள்ளிமலை, பெரியகீசகுப்பம் சுற்றுப்புற பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியகீசகுப்பம் பகுதியில் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த நாட்டு வெடிகுண்டில் நாய் தலை சிதறி பலியான இடத்தில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்