திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , ஸ்டார்ட் அப் டிஎன் (மதுரை பிராந்திய மையம்) உடன் இணைந்து சிறு,குரு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை (எம்எஸ்எம்இ) மற்றும் கூகுள் டெவலப்பர்ஸ் குரூப் மதுரை ஆகியவற்றின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்காக இரண்டு நாள் 36 மணி நேரம் ஹேக்கத்தான் நிகழ்வை மார்ச் 30ஆம் தேதி முதல் 31 தேதி வரை திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்டார்ட்அப் டிஎன் என்பது தமிழ்நாட்டில் ஸ்டார்ட் ஆஃப்கள் மற்றும் புதுமைகளை வளர்ப்பதற்கான தமிழ்நாடு அரசின் நோடல் ஏஜென்சி ஆகும். ஸ்டார்ட் ஆப் டி என் தொலைநோக்கு பார்வையானது, தமிழ்நாட்டை மேல் நோக்கிய ஸ்டார்ட் அப்களுக்கான உலகளாவிய இலக்குகளுக்காக மேம்படுத்துவதாகும். தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ,நல்ல ஆரோக்கியம், பசியின்மை, தண்ணீர் சார்ந்த வாழ்க்கை, தரமான கல்வி மற்றும் காலநிலை நடவடிக்கைகள் போன்ற எஸ்டிஜி தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களின் தேர்ந்தெடுக்கும் நோக்கில் இந்த நிகழ்வு எடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக மொத்தம் 150 அணிகள் பதிவு செய்யப்பட்டன. அதிலிருந்து 33 ஆர்வமுள்ள அணிகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. ஸ்டார்ட் அப் டிஎன் ஆனது 5 சிறந்த அணிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுடன் கெளரவிக்கிறது.

இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் நாகா ஃபுட்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் கே.எஸ். கமலக்கண்ணன், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியின் முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே. ரகுராம், கல்லூரியின் முதல்வர் டி.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். மேலும் ஸ்டார்ட்அப் டிஎன் அதிகாரிகள் வினோத் ராஜேந்திரன், திட்ட முன்னணி மதுரை மண்டல மையமான டான்சிம் (ஸ்டார்ட் ஆப் டிஎன்) பி.கருப்பணன், திட்ட அசோசியேட் மதுரை மண்டல மையமான டான்சிம் ஸ்டார்ட் அப் டிஎன் செந்தில்குமார் முருகேசன் நிறுவனர் மற்றும் சிஇஓ , ஜெஐஓவிஐஓ ஹெல்த்கேர் கூகுள் டெவலப்பர் கம்யூனிட்டி மதுரை, இந்த இரண்டு நாள் நிகழ்வை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் (ஜ/சி) எஐ,டிஎஸ்,பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.
டி.ஹேமலதா , இசிஇ பேராசிரியர் டாக்டர். கே.மீனா என்ற ஜெயந்தி, சிஎஸ்இ பேராசிரியர் டாக்டர். எஸ்.புஷ்பலதா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.