தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் (25.3.2023) நேற்று இரவு நடந்த துயரச்சம்பவம். கநாகேஸ்வரம் என்பவரின் மாடி வீட்டில் ப்ளூ ஸ்டார் ஏ. சி பழுதான நிலையில் சுபா எஜென்சி எஸ்.எஸ்.டி சர்வீஸ் சென்டரில் வேலை பார்க்கும் ஷேக் அலாவுதீன், கணேஷ் இருவரும் எஸ். எஸ். டி சர்வீஸ் சென்டர் உரிமையாளரின் ஆணைப்படி ஏ.சி இன்டோர் காயிலை தங்களுடைய வாடிக்கையாளர் வீட்டில் பொருத்துவதற்க்காக அதனை எடுத்து சென்றுள்ளனர்.
ஆனால் அதற்கு முன்பே அதே நிறுவனத்தில் பணிபுரியும் வேறு ஏ.சி மெக்கானிக் குழு ஒன்று ஏ.சி

அவுட்டோர் யூனிடில் பழுது பார்ப்பதற்காக நைட்ரஜன் கேஸ்ஸை நிரப்பி வைத்துள்ளனர். அந்த விவரம் தெரியாமல் அங்குசென்ற கும்பகோணம் சுபா எஜென்சி எஸ்.எஸ்.டி சர்வீஸ் சென்டரில் பணிபுரியும் ஷேக் அலாவுதீன், கணேஷ் இருவரும் ஏசி இன்டோர் காயிலை பொருத்திய பின்பு ஏசி அவுட்டோரில் நைட்ரஜன் கேஸ் இருப்பது பற்றிய விவரம் தெரியாமல் ஏசியில் கேஸ் ஏற்றும் பொழுது நைட்ரஜன் கேசின் மிக அதிக அழுத்தத்தால் ஏசி வெடிக்க நேர்ந்துள்ளது. இரு நபர்களும் உடல் முழுவதும் காயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலே கணேஷ் என்பவர் உயிரிழந்துவிட்டார்.
இதனால் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இவை அனைத்தையும் நமது TRACTO சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பாரதி, மதன், சிவபாலன், டோனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேற்று இரவே சென்று ஆய்வு செய்து சேகரித்த செய்தி விபரம் .மாலை 4.30 மணி வரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் இருந்தார்கள்.
அதன் பிறகு இறந்த கணேஷ் என்பவரின் உடல் போஸ்ட்மாடம் செய்ய உள்ளது. அந்த சர்வீஸ் சென்டர் உரிமையாளர் பெயரில் IPC 174 case பதிவு செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. இன்னொருவர் சேக் அலாவுதீன் என்பவருக்கு திருச்சி KMS மருத்துவமனையில் கண் ஆபரேஷன் முடிந்தநிலையில் இடது கை பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெற உள்ளது. திருச்சி KMC மருத்துவமனையில் தஞ்சாவூர் TRACTO சங்க நிர்வாகிகள் கவனித்து கொண்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை அதற்கான முயற்சியில் உள்ளனர்.
Please Fallow : Google News
Please Fallow : Telegram