பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அதானி பவுண்டேஷன் மூலம் படுக்க வசதிகள் மற்றும் நவீன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனையாக இருக்கும்பழவேற்காடு ஊராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பழவேற்காடு ஊராட்சி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அதானி பவுண்டேஷன் மூலம்
2,40,000 மதிப்பீட்டில் 20 கட்டில் மெத்தை மற்றும் 30,000 மதிப்பீட்டில் 100 லிட்டர் குடிதண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அதானி துறைமுக தலைமை நிர்வாகி ராம்தேவ், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதிசரவணன்,துணை தலைவர் பி.எல்.சி.ரவி, மருத்துவர் பாஃத்திமா,அதானி ஜேசுராஜ்,வார்டு உறுப்பினர்கள் மற்றும்.மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.