சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஆர்.சி செட்டிப்பட்டியில் வில்லியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
நேற்று காலை 10 மணியளவில் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் உள்ள புதர்வழியாக வீட்டின் சுற்றுச்சுவர் மீது தாவி நெளிந்தபடியே வீட்டின் உட்புறம் விழுந்தது.
சத்தம் கேட்டு வீட்டின் பின்புறம் வந்த வில்லியம் மனைவி 8 அடி நீளப்பாம்பை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
பின்னர் சுதாரித்து கொண்டு அவர் கூச்சலிடவே,சாரைப்பாம்பு லாவகமாக ஒரே ஜம்பில் சுற்றுச்சுவரைத்தாண்டி மீண்டும் புதருக்குள் சென்று மறைந்தது.
வீட்டின் உரிமையாளர் உடனடியாக வீட்டின் பின்புறமுள்ள புதர்களை அகற்றினார்.மேலும் வெயில் காலங்களில் இது போன்று விஷ ஜந்துக்கள் வீட்டிற்க்குள் வராத வகையில் வீட்டை சுற்றி புதர்கள் இருந்தால் அதனை அகற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.