திண்டுக்கல் கிரீன் வேலி பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி பள்ளியின் உள்வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் டாக்டர்.எம்.முகமது காசிம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிரீன் வேலி பப்ளிக் பள்ளியின் முதல்வர் எ.முஹம்மதுமைதீன் வரவேற்புரையாற்றினார். சன் பார்மா உரிமையாளர் ஹாஜி. எம்.நஸ்ருதீன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி கிளப் திண்டுக்கல் போர்ட் தலைவர் ஆர்.பாண்டி மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிரீன் பார்க் பள்ளி முதல்வர் சுகந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.