வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் வந்தது இதன் அடிப்படையில் சோதனை நடத்தியதில், ரேஷன் அரிசி மற்றும் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டார் இந்நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் சிறப்புபடை உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று தமிழக ஆந்திரா எல்லையான பேரணாம்பட்டு- பத்தரப்பல்லி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்
அப்போது தமிழகத்தில் இருந்து சந்தேகப்படும் நிலையில் ஆந்திராவுக்கு சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி கடத்துவது கண்டறியப்பட்டது. லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பார்த்தீபன்(36) என்பதும், இவர் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசியை பெற்று ஆந்திராவுக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது Eicher Lorry kA01AE2018. என்ற வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் மேலும் பார்த்தீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் 3 டன் ரேஷன் அரிசி மின் வேனுடன் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.