உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 30 கடைகளில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட சுமார் 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், தட்டு, டம்ளர், கப் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் வியாபாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் சரவணனுக்கு கிடைத்த தகவலின் பெயரில் இது குறித்த நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார் அதன்பேரில் உளுந்தூர்பேட்டை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் தமிழ்மணி மற்றும் நகராட்சி அதிகாரிகள் இன்று மதியம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது 30க்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட சுமார் 1000 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கவர், தட்டு, டம்ளர், கப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததோடு வியாபாரிகளுக்கு சுமார் 25000 ரூபாய் அபராதம் விதித்து உடனடியாக வசூல் செய்தனர் மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்தனர்.