வேலூர் மாவட்டத்தில்
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் திமுக தலைவருமான தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம், வேலப்பாடி அருகே பூந்தோட்டம் பகுதியில் இல்ல அறக்கட்டளை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய வேளைக்கு இனிப்பு, மதிய உணவும் முதியோர்களுக்கு வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நா அசோகன் தலைமையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா கார்த்திகேயன் வழங்கி திமுக தலைவர் பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் ஒன்றிய மாவட்டத் துணைச் செயலாளர் முனீர் பாஷா சத்துவாச்சாரி பகுதி செயலாளர் கணேஷ் சங்கர் சைதாப்பேட்டை பகுதி உறுப்பினர் சையத் இப்ராஹிம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.