திண்டுக்கல்லில் பிவிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், பாரத மாதா பவுண்டேஷன் இணைந்து இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி பிவிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிவிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஏ. உபகாரசெல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு பிவிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் வெங்கடேஸ்வரி சுப்ரமணி, கல்லூரியின் இயக்குனர் டாக்டர்.
பரமசிவம் பழனிச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் செயலாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலரும், திண்டுக்கல் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மன் டாக்டர்.என்.எம்.பி. காஜாமைதீன், பொறியாளர்கள் சங்கத்தின் மண்டல தலைவரும்,சமூக ஆர்வலருமான பொறியாளர் சி. பெஞ்சமின் ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தான கொடையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.