சென்னை: தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்கும் வகையில் எலி மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் :
தமிழகத்தில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலி விஷம் மிகவும் ஆபத்தான விஷம். தற்கொலைக்கு காரணமான இந்த மருந்தை நிரந்தரமாக தடை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எலி விஷம் தயாரித்தல், மொத்த விற்பனை, போக்குவரத்து, சில்லறை கடைகளில் விற்பனை மற்றும் ஆன்லைன் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆறு பூச்சிக்கொல்லிகளில் ‘மோனோ குரோட்டோபாஸ், ப்ரோபினோபாஸ், அசிபேட், புரோபினோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ்’ ஆகியவை மிகவும் ஆபத்தானவை.
இவற்றை 90 நாட்களுக்கு தடை செய்து வேளாண் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளையும் மத்திய அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்; அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த, 2020ல், தமிழகத்தில், 16 ஆயிரத்து, 883 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மருந்தகங்களில் பூச்சிக்கொல்லிகள் எளிதில் கிடைத்தன. சானி பவுடர் என்ற நச்சுப் பொடியும் விரைவில் தடை செய்யப்படும்.
உணவுத் தரப்படுத்தலைக் கையாளும் நாடு முழுவதும் 75 மாவட்டங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன; அதில், தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதுபோன்ற பல்வேறு விருதுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை பெற்று வருகிறது.
அவர் கூறியது இதுதான்.