குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியை சார்ந்தவர் ஜெஸ்டின்.இவர் அதே பகுதியில் காய்கறி மற்றும் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வாங்கிய பழக்குலை ஒன்றை பழுக்க வைப்பதற்காக பதம் வைத்துள்ளார்.பதம் வைத்த செவ்வாழை என்று கூறப்படும் பழக்குலையை பழுத்ததாக கூறி இவர் போய் எடுத்துள்ளார்.அப்போது நான் அதிசயமாக அந்தப் பழக்குலையின் நடுவே ஒரு பகுதி சிவப்பு நிறத்திலும் மறுப்பகுதி பச்சை நிறத்திலும் பழுத்து இருந்துள்ளது.
அதேபோல பழக்குலையின் மட்டைப்பகுதி ஒரு பகுதி சிவப்பாகவும் மறுபகுதி பச்சை நிறமாகவும் இருந்துள்ளது.இதை அடுத்து அந்த அதிசய வாழைபழக்குலையை கடையின் உரிமையாளரான ஜஸ்டின் தனது கடைக்கு முன்பு வைத்துள்ளார்.இதை அறிந்து வந்த…