பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களை தொழில் முனைவோராக உருவாக்குவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் பொருளாதாரத் தில் பின்தங்கிய பிரிவி னர்களை தொழில் முனைவோராக உரு வாக்குவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் வங்கி அலுவலர்க ளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் நடைபெற் றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.
இந்தியன் வங்கி கடலூர் மண்டல மேலாளர் கவுரிசங் கர்ராவ், ரிசர்வ் வங்கி மேலா ளர் சொர்ணாம்பாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ஷ்ர வன்குமார் பேசியதாவது:-
சங்கராபுரம் அருகே ஏந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் .
கடன் தள்ளுபடி
மாவட்ட தொழில் மைய திட்டங்கள், தமிழ்நாடு ஊரகவாழ்வாதார இயக்கத் திட் டங்கள், தாட்கோ துறையின் திட்டங்கள், வாழ்ந்து காட்டு வோம் திட்டங்கள் மற்றும் இதர துறைகளில் சிறு, குறு தொழிற்கடன்கள், தனிநபர் கடன் மற்றும் முதன்மை திட் டங்கள் குறித்து வங்கி வாரி யாக மதிப்பாய்வு செய்யப் பட்டது. தாட்கோ திட்டத் தின் கீழ் அனைத்து வங்கி களும் அதிக அனுமதி மற்றும் கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட் டுறவு சங்கங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்குகடன் தள்ளுபடி செய்யப்பட்டதற் கான சான்றிதழை சுய உதவி குழுக்களுக்கு 100 சதவீதம் வழங்கிட வேண்டும். வங்கி விழிப்புணர்வு மையம் மூலம் சமூக பாதுகாப்பு திட்டம், நிதி சார்ந்த பயன்பாடுகள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு மேற்கொள்ள
வேண்டும்.
காட்பாடியில் வடமாநில இளைஞர் ஒருவர் மது போதையில் அங்குள்ள வீடுகளுக்கு உள்ளே புகுந்து அட்டகாசம்
கடன் இலக்கு
அதேபோல் வங்கியாளர்கள் சமூக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதிக உத்வேகம் அளித்து, மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை அதிகமாக தொழில் முனைவோராகஉரு வாக்குவதை உறுதி செய்ய வங்கிகள் உதவிட வேண்டும். நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் இலக்கு ரூ.500 கோடியி லிருந்து ரூ.647 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்கான சாத்திய கூறுகளை வங்கி களும், துறை அலுவலர்களும் ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். வங்கியாளர்கள் ஒரு மாதத்திற்குள் நிலுவை யில் உள்ள அனைத்து விண் ணப்பங்களையும் சரி செய்து இம்மாத இறுதிக்குள் வழங் கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையை தூக்கிட்டு கொன்றுவிட்டு அதே சேலையில் தாய் தற்கொலை
கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ரா ஜன், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேக ரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, மாவட்ட தாட்கோ மேலா ளர் ஆனந்தகோகன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்கு னர் ராஜேஷ்குமார் உள்பட மாவட்ட அளவிலான வங்கி அலுவலர்கள் கலந்து கொண் டனர்.