வேலூர் மாவட்டம்
மத்திய அரசு முத்ரா திட்டத்தில் நெசவாளர்களுக்கு வங்கி கடன் வழங்க மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மாநில பாஜக துணைத் தலைவர் மற்றும் மாநில நெசவாளர் பிரிவு பார்வையாளர் வி.பி துரைசாமி பேட்டி.
BJP பாஜகவின் மாநில அளவிலான நெசவாளர் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில். பாஜக நெசவாளர் பிரிவு மாநில தலைவர், கே.எஸ் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில செயற்குழுவில், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்திட உரிய நேரத்தில் உற்பத்தி ஆணை வழங்கிடவும் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்த கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு நிலுவைத் தொகையினை முழுவதும் உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும், நெசவாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி துரைசாமி,
இந்து மத வளர்ச்சிக்கு பாடுபட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த கிருபானந்த வாரியாருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள பாவடி நிலங்களை நெசவாளருக்கு மீட்டு தர வேண்டும், நெசவாளருக்கு பாத்தியப்பட்ட பாவடி நிலங்களை நெசவாளர்களுக்கே பட்டா வழக்கம் வேண்டும்.
மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள நெசவாளர்களுக்கு 508 கோடி ரூபாய் கடன் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு நெசவாளர் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நெசவு தொழிலுக்கான மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்க வலியுறுத்தப்படும்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் அந்தப் பகுதி மக்கள் கேட்கும் கூடுதல் விலையை வழங்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுசா, பன்னீர்செல்வம் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பார்வையாளர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் மனோகரன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுகன்யா.மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் உள்பட பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்