வேலூரை கடந்து செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பொதுமக்கள் அவதி
வேலூர் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே அனுமதி இல்லாமல் கொட்டப்படும் குப்பைகளில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்ததில் கொழுந்து விட்டு எரியும் பிளாஸ்டிக் கழிவுகள் இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயம்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கரும் புகையுடன் வருவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
அப்பகுதியில் அடிக்கடி குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா அல்லது மாநகராட்சி ஊழியர்களே தீ வைத்தார்களா பொதுமக்கள் கேள்வியாக உள்ளது. துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.