சேலம் மாவட்டம் ஓமலூர் போக்குவரத்து பணிமனை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் 7ஆம் தேதி இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுப்போக்குவரத்தை பாதுகாக்கவும் ,ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியில் 2000 அரசு பேருந்துகள் நிறுத்தியதன் விளைவாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தற்போதைய அரசும் இதனை சரிசெய்யாமல் போக்குவரத்து தனியார்மயம் போன்ற நடவடிக்கைகளை எடுத்து பயணிகள் பொதுப்போக்குவரத்தை தவிர்த்து தனியார் போக்குவரத்திற்க்கு செல்ல வழிவகுப்பதாக குற்றம் சாட்டினர்.
பொதுப்போக்குவரத்தை பாதுகாக்க மாரத்தான்,இருசக்கர வாகன பிரச்சாரம் ஆகியவை மாநிலம் முழுவதும் 320 பணிமனைகள்,பேருந்து நிலையங்கள் முன்பாக பிப்ரவரி 26 முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெற்று வருவதாகவும்.மார்ச் 14 ஆம் தேதி சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு சிஐடியு ஓமலூர் கிளை தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.மண்டல தலைவர் செம்பன் மற்றும் சிஐடியு தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.