
ஓசூர் மாநகரின் முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதியை தந்தை பெரியார் சர்க்கிள் என பெயர் மாற்றும் ஓசூர் மாநகராட்சியின் செயலை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , அதன் பின்னர் ஓசூர் மாநகர ஆணையர் அவர்களுக்கும் மாநகர மேயர் அவர்களுக்கும் பெயர் மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முனீஸ்வர் நகர் சர்க்கிள் பெயரை மாற்றக்கூடாது என தெரிவித்து மனு அளிக்கப்பட்டது , ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் K.S.நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் M.நாகராஜ் Ex.MC மாநில செயற்குழு உறுப்பினர் K.முனிராஜ் ,VHP மாவட்ட தலைவர் தேவராஜ் பஜ்ரங்தள் வட தமிழக அமைப்பாளர் U.கிரண் இந்து முன்னணி சேலம் கோட்ட செயலாளர் திரு.உமேஷ் மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர் , மேலும் பெரியார் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற கூட்டத்தை ஓசூர் 40 வார்டு மாமன்ற உறுப்பினர் பார்வதி நாகராஜ் , 25 வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவராஜ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் ,
ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் முனீஸ்வர் நகர் சர்க்கிள் பெயரை பெரியார் சர்க்கிள் என்று பெயர் மாற்ற தொடர்ந்து முற்பட்டால் ஓசூர் பகுதி மக்களை ஒன்றிணைத்து இந்து இயக்கங்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தெரிவித்தனர்.