காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி.துறையின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் நேர்காணல் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில்
காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி துறையின் மாநில செயற்குழு கூட்டம்,நேர்காணல் நிகழ்ச்சி மாநில தலைவர் T.A.நவீன் தலைமையில் நடைபெற்றது இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி AICC உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளருமான சிரஞ்சீவி, ஓ.பி.சி.துறையின் மாநில பொறுப்பாளர் மோகன் நாயுடு, மைனாரிட்டி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா, ஆந்திர மாநில ஓ.பி.சிதுறை பொறுப்பாளர் சிறப்புரையாற்றி நேர்காணல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பி.சி.துறையின் மாநில பொறுப்பாளர்கள் ஆந்திர மாநில கீதூர் வெங்கடேஷ், வெங்கடசாமி, அமீத், காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் பொன் கிருஷ்ண மூர்த்தி,காமராஜ் அட்வகேட், ரஞ்சித்குமார், ரஞ்சன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தினேஷ், தன்ராஜ், குமரன் மற்றும் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அனைத்து மாவட்ட தலைவர்கள், தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டு ஓ.பி.சி.துறையின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். அச்சமயம் ஓ.பி.சி.துறையின் வேலூர் மாநகர மாவட்ட தலைவர் D.நோபல் லிவிங்ஸ்டன் அவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டார் நேர்காணலில் பங்கு பெற்ற அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.