ராகுல் காந்தியின் லோக்சபா எம்.பி., பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.
2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதித்தது.
இதையடுத்து, அவர் வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (மார்ச் 26) நாடு முழுவதும் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இஸ்ரோவின் எல்விஎம்-3 / 36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர்கள் திரண்டுள்ளனர். இங்குள்ள காந்தி நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்ட இடத்திற்கு வந்தனர். ஆனால், சத்தியாகிரக போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.