சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் கிட்டு, இவர் குடியிருக்கும் நிலத்தின் அருகில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து கிட்டு கூறுகையில், தனது தந்தையின் ராணுவ பணிக்காக வழங்கப்பட்ட நிலத்தில் தாங்கள் குடியிருந்து வரும் நிலையில், அந்த நிலத்தில் தற்போது அங்கன்வாடி கட்டிடம் கட்டுவது சரியல்ல என்றும்,
தங்களுக்கு அரசு சார்பில் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு கட்டுமான பணிகளை தொடங்குமாறு, கிட்டு தனது குடும்பத்தாருடன் சேர்ந்து, கட்டிட பணி செய்ய வந்தவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.