SC/ST வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகாமல் வலுப்பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்.
இந்திய நாடு முழுவதும் தலித் மக்கள் மீது அதிகரித்து வரக்கூடிய சாதி வெறி தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகாமல் முறையாக அமல்படுத்திட கோரியும், அரசியல் அமைப்பு சட்டம் தலித் மக்களுக்கு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு உள்ளிட்ட சட்ட வரைமுறைகளை பாதுகாத்திட கோரியும்,
குடியாத்தம் அடுத்த பரதராமி திருவள்ளுவர் நகர் அருந்ததியர் பகுதியில் சாதி வெறியால் தள்ளிப் பெண்ணை பாலியல் தொல்லை செய்து சாதி ரீதியாகவும் இழிவுபடுத்தி பேசி தாக்குதல் நடத்திய வெங்கடேசன் உள்ளிட்டோர் மீதான வழக்கை விரைந்து நடத்த வேண்டும், திருப்பத்தூர் காலனி பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் துப்புரவு பணி செய்யும் அருந்ததியர்களின் வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டுமென மிரட்டும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அவர்களுக்கு அங்கேயே வீடு கட்டித்தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.