திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா மற்றும் 28-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா.
திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியின் 28-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன் அலுவலகத்தை திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரோக்கஸ்வளவன் தலைமை வகித்தார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகரச் செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சியின் 28-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அ.நடராஜன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் வ.அன்பரசு, மாவட்ட பொருளாளர் சந்திரன்,செய்தி தொடர்பாளர்கள் .
ஸ்வீட் ராஜா,அ.பிரேம் ராஜா, ரெட்டியார்சத்திரம் ஒன்றியச்செயலாளர்.
ஸ்டாலின்ராஜா,அலெக்சாண்டர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட நிர்வாகிகள். திருமா சூர்யா ,தலித் நாகராஜ் ,
திருமாமுத்து, பெ.தமிழ்வளவன், பா.தேவா பிரசாந்த், பந்தல் பாண்டி உள்ளிட்ட கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து
கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.