வேலூர் :
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் மற்றும் தயிர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 5,000 லிட்டர் தயிர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த 12-ம் தேதி உற்பத்தி செய்யப்பட்ட தயிர் பாக்கெட்டுகளை முகவர்களுக்கு வநியோகிக்கவில்லை இதனால் பொதுமக்கள் மற்றும் முகவர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து வேலூர் ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், தயிர் தாமதமான அன்றைய தினம் பணியில் இருந்தது துணை மேலாளர் உமா மகேஸ்வரராவ் என்பதும், அவரது பணி அலட்சியம் காரணமாக தயிர் மற்றும் மோர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து ஆவின் துணை மேலாளர் உமா மகேஸ்வரராவை பணியிடை நீக்கம் செய்து ஆவின் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்