
மோகன்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவில்
பேட்மிண்டன் போட்டி
மாணவ மாணவிகள் அபாரம்
திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள மோகன்ஸ் பேட்மிண்டன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான மாணவ,மாணவிகளுக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது . வெற்றி பெற்ற அனைவருக்கும் திருப்பூர் பேட்மிண்டன் செயலாளர் மோகன் குமார் பரிசுகள் வழங்கினார், சிறப்பு விருந்தினராக டிஎம்எப் மருத்துவமனை டாக்டர் ஜெயராமன் கலந்து கொண்டார். இதில் மாணவிகள் பிரிவில் 11 வயது கீழ் உடுமலைப்பேட்டை மாணவி ஷியமா ஸ்ரீ முதலிடமும், கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் பயிலும்,மோகன் அகாடமி மாணவி பவிஷ்னா இரண்டாம் இடம் பிடித்தார்கள்,13 வயது மாணவி பிரிவிலும் ஷியமா ஸ்ரீ முதலிடம், தனு ஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்தார்கள். 15 வயது மாணவி பிரிவில் ஸ்மிதா ஹசினி முதலிடமும், ஜனனி இரண்டாம் இடம் பிடித்தார்கள்,17 வயது மாணவி பிரிவில் சங்கமித்தரா முதலிடமும், ஸ்மிதா ஹாசினி இரண்டாம் இடம் பிடித்தார்கள், 9 வயது மாணவி பிரிவில் நிருல்ய முதலிடமும், சாஸ்னிகா இரண்டாம் பிடித்தார்கள்.
9 வயது மாணவ பிரிவில் வீரனேஷ் ஜெயின் முதலிடமும் ஆகிர் இரண்டாம் இடம் பிடித்தார்கள்,11 வயது மாணவ பிரிவில் பிரதீஷ் முதலிடமும், தர்ஷன் இரண்டாம் இடம் பிடித்தார்கள் . 13 வயது மாணவ பிரிவில் வேதாந்த முதலிடமும்,தேவனேஷ் ஜெயின் இரண்டாம் இடம் பிடித்தார்கள்,15 வயது மாணவ பிரிவில் நகுலன் கார்த்தி முதலிடமும், வம்சி கெரிஷ் இரண்டாம் இடம் பிடித்தார்கள்,17 வயது மாணவ பிரிவில் எஸ்.பி. கிர்திக் முதலிடமும் , ரிபினேஷ் இரண்டாம் இடம் பிடித்தார்கள் பெற்ற சாதனை வெற்றி படைத்தார்கள், வெற்றி பெற்றார்கள், முதலிடம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் , அரையிறுதிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும்
பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது , லெஜன்ட்ஸ் பேட்மிண்டன் அகாடமி கோச் ராஜா ,மோகன்ஸ் அகாடமி பேட்மிண்டன் கோச் மகேஷ், ராம்திலகா, ஸ்ரீ கோகுல், பிரண்ட்லைன் பள்ளி மாஸ்டர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .