தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத்தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (07.05.2023) விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக, வேம்பாரில் நடைபெற்றது.
கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழகத் தீர்மானக்குழு இணைச் செயலாளருமான சத்தியமூர்த்தி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர்பாண்டியன், பாண்டியராஜ் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், புனிதா, ராஜபாண்டி வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி ராஜ், மாதவடியான்,பெப்பின் காகு, சந்திரமோகன் விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோ மீனாமேரி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கனகராஜ் ஒன்றிய சிறுபான்மையினர் நலஅணி அமைப்பாளர் தர்மநேச செல்வின் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாள ஜோசப் திலகராஜ் உட்பட கிளைச் செயலாளர்கள் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம்
செய்தியாளர் : ந. பூங்கோதை