இரு ஆண்டாக வாடகை செலுத்தப்படாததால் காட்பாடி மின்வாரிய அலுவலகக் கட்டடத்துக்கு உரிமையாளர் பூட்டுப் போட்டுச் சென்றார். இதனால், மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் அலுவலகத்துக்குள் செல்ல முடியாமல் சாலையில் நின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து வள்ளிமலை செல்லும் சாலையில் வாடகை கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்துக்கு மாத வாடகையாக ரூ.2000}ம் நிர்ணயிக் கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இந்த கட்டடத்துக்கு உரிய வாடகையை அதன் உரிமையாளருக்கு செலுத்தப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து, கட்டடத்தின் உரிமையாளரான காட்பாடி குமரப்பா நகரைச் சேர்ந்த எஸ்.லிடியாசரோஜினி வாடகையை செலுத்தும்படி காட்பாடி மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்துவந்துள்ளார்.
எனினும், வாடகை செலுத்தப்படாததால் ஆத்திரமடைந்த கட்டடத்தின் உரிமையாளர் லிடியாசரோஜினி சனிக்கிழமை காலை காட்பாடி மின்வாரிய அலுவலக கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு விட்டுச்சென்று விட்டார். இதையடுத்து, காலையில் பணிக்கு வந்த மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர்.
EB மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் EB அலுவலகத்தை பூட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து பொதுமக்கள் கூறியது நாங்கள் மின்கட்டணம் செலுத்த வந்தோம் இன்று கடைசி நாளான இன்று மின் கட்டணம் கட்டவில்லை என்றால் அபராதம் தொகைய சேர்த்து கட்ட வேண்டும் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை அப்பகுதி மக்கள் குமருகிறார்கள் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பு நீடித்தது இது குறித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்