சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த ஏந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.
மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பும்போது, உபரிநீர் மரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது. ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழா நடைபெற்றது.
இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதனால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மோகன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பேரில் உயர்நீதிமன்றம் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டது.
சங்கராபுரம் அருகே ஒரே நாளில் மூன்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
அதன் அடிப்படையில் சங்கராபுரம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் மேற்பார்வையில் பகண்டை கூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.