மதுரை வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் வாழைக்குலை ஊட்டமிடுதல் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கிராமத்தில் ஊரக வேளாண்மைப் பணி அனுபவ திட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மதுரை வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் இரா. வேடியப்பன் கோட்டப்பட்டி கிராமத்தில் வாழைக்குலை ஊட்டமிடுதல் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் வாழைக்குலை ஊட்டமிடுதல் மற்றும் அதன் நன்மைகள் பற்றி விவசாய மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இதன் நன்மைகள் :
1) வாழைத் தாரின் எடை அதிகரிக்கும்.
2) சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த பயிற்சியின் மூலம் விவசாயிகள் வாழைக்குலை ஊட்டமிடுதல் பற்றி தெளிவாக அறிந்து கொண்டன.