அன்பே சிவம் உணவகம் சார்பில்திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கே தேநீர் ஐந்து ரூபாய் எனவும், உணவுக்கு பத்து ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பண வசதி இல்லாதவர்கள் அவற்றைத் தர வேண்டாம் எனவும் கூறி அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த இந்நிகழ்வில் அன்பே சிவம் தலைவர் குமார் ,கார்த்தி, சத்யா ,ஆனந்த் ,சுரேஷ் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இடும்பன்மலை முன்பு உள்ள குப்பைகளை அகற்றி அன்னதானம் செய்ய முற்படும்பொழுது தேவஸ்தான ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .
தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் அப்பகுதியை கயிறு கட்டி அடைத்ததால் சாலையில் வைத்து உணவு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.