திண்டுக்கல் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் பழனி தங்கரதம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் பழனி அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் லயன். ஜே.பி. சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வருகை தந்த அனைவரையும் பழனி தங்கரதம் லயன்ஸ் சங்கம் தலைவர் லயன். பி. முருகன் வரவேற்றார்.
திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கா. பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி ராமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கண் பரிசோதனை முகாமிற்கு பழனி மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் லயன். என் .சுப்பிரமணியன், பழனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கௌரவ தலைவர் எம்.பி. கண்ணுச்சாமி, பழனி தங்கரதம் லயன்ஸ் சங்கம் பட்டயச்செயலாளர் லயன் பி.என் .சுரேஷ் பழனி அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஒன்றிய தலைவர் கே. மாசிலாமணி காளியப்பன் வட்டார தலைவர் லயன் .எஸ் ஜீவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இலவச கண்பரிசோதனை முகாமில் கண்புரை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துதல். சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை செய்தல். கண்நீர் அழுத்த நோய் உள்ளவர்கள் பரிசோதனைகள் செய்யவும். குழந்தைகளின் கண் நோய் மற்றும் கிட்டப் பார்வை தூரப்பார்வை உள்ள நோயாளிகளுக்கு சிறந்த முறையில் பரிசோதனைகள் செய்து கண் கண்ணாடிகள் குறைந்த விலையில் முகாம் நடக்கும் இடங்களிலேயே கிடைக்கச் செய்தல்.
இந்நிகழ்ச்சியை பழனி தங்கரதம் லயன்ஸ் சங்கம் தலைவர் லைன் பி.முருகன் நிர்வாக செயலாளர் ஆர். ராஜவர்மன் பொருளாளர் லைன். கே. லோகநாதன் மற்றும் பழனி தங்க ரதம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.