இலவம்பாடி ஊராட்சி, இளவம்பாடி கிராமத்திற்கு புகழ்பெற்ற முள்ளுக் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது விவசாயிகள் பெருமகிழ்ச்சி… விளைச்சலுக்கு ஏற்ற விலை தேவை என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
வேலூர் மாவட்டம்,
அனைக்கட்டு இலவம்பாடி, கேவிக்குப்பம், ஒடுக்கத்தூர் குருராஜாபாளையம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்படுவது இலவம்பாடி முள்ளுக் கத்திரிக்காய் இந்த கத்திரிக்காய்க்கு மக்களிடம் நல்ல வரவேற்புள்ளது. சமையலிலும் இந்த கத்திரிக்காயை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த பயிர் வைகாசி மாதம் நடவு நட்டு விவசாயிகள் முறையாக பராமரித்தால் ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் பயிராகும் அசைவ உணவான பிரியாணியுடன் இந்த கத்திரிக்காயை தான் பயன்படுத்துவார்கள் எனவே விவசாயிகள் அதிக அளவில் பயிர் வைக்கும் இலவம்பாடி முள்ளுக்கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த முள்ளுக் கத்திரிக்காய்க்கு தற்போது புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த கத்திரிக்காய் பயிரிட இயற்கை முறையில் பயிரிடும் போது மகசூல் குறைவாக அதிகரிப்பதால் மன வருத்தத்திற்கு ஆளானாலும் உடல் ஆரோக்கியத்தில் மகிழ்ச்சி ஊட்டுகிறது எனவே இயற்கை முறையில் பயிரிடப்படும் கத்திரிக்காய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்த கத்திரிக்காய் ரசாயன முறையில் பயிரிட பூச்சு மருந்து உரம் விவசாயிகள் கூலி என அனைத்தையும் கணக்குபார்த்தால் சரியான விலை கிடைக்கவில்லை என்பது தான் உண்மை இருந்தாலும் இதனை மக்கள் விவசாயத்தில் விட்டுவிட கூடாது என பயிர் வைக்கின்றனர். இந்த புவிசார் குறியீடு கிடைத்துள்ளது அனைத்து விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.