சென்னை ஒரு நாள் படத்தை போன்று விபத்தில் மூளை சாவு :அடைந்தவரின் இதயமும், நுரையீரல் தானம் :
விருதுநகர் அருகில் சாலை விபத்திற்குள்ளான செல்வம் (வயது 33) என்பவர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நோயாளி நேற்று மூளை சாவு அடைந்து விட்டதால் அவரது உறவினர்களின் பரிந்துரையின் பேரில் அவரது இதயம் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரமோகன் எனும் நோயாளிக்கும் , அவரது நுரையீரல் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாவுராவ் நகாடி என்பவருக்கும் பொருத்தப்பப்பட உள்ளது.
இவற்றை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து
ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிந்தாமணி , திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து கோயம்புத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கு ஏதுவாக மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக அனைத்து சந்திப்புகளிலும் பச்சை விளக்கில் தடையில்லாமல் ஆம்புலன்ஸ் கோயம்புத்தூர் மற்றும் புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.
உயிர்காக்கும் மருத்துவ சேவைக்காக மனித நேயத்துடன் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.