கன்னியாகுமாரி மாவட்டத்தில் குலசேகரம் பேரூராட்சியில் உள்பட்ட நாகக் கோடு பகுதியில் செயல்பட்டுவரும் ரேசன்கடை எண் 28CGOO1CL இன்று பெய்த திடிர் மழையினால் மழைநீர் கட்டிடத்தின் உள்பகுதியில் சென்று ரேசன் பொருள்கள் சேதம். நாகக் கோடு-திருவரம்பு சாலையை சரியாக பராமரிக்காமல் இருந்ததாலும், பேரூராட்சி நிர்வாகம் வடிகால் அமைக்காததாலும், மழைநீர் கடையினுள் சென்று பல ஆயிரம் ரூபாய் ரேசன்பொருட்கள் மழைநீரில் சேதம் அடைந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
உடனடியாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக ரேசன் பொருட்கள் மாற்று இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
