ஓசூர் மாநகராட்சியின் மெய்யர் எஸ்.ஏ சத்யா மற்றும் துணை மேயர் ஆனந்தையாவை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மேற்கு மாவட்ட செயலாளர் கி கோவிந்தராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஓசூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் இருக்கும் பொதுவான மக்கள் பிரச்சினை குறித்து கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.மேலும் இந்த கோரிக்கை மிக விரைவாக நிறைவேற்றப்படும் என்று மேயர் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் தக்கலிங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன் முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி கே கிருஷ்ணன் முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பூபதி நகரச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.