சேலத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் முனைவர் ஜவாஹிருல்லா தலைமையில் சேலம் மகாத்மா காந்தி ஸ்டேடியம் அருகே உள்ள எம்.வி.ஆர் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசு இந்த நியாயமான கோரிக்கையை கருணையோடு பரிசீலித்து நெடுங்கால முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கூட்டம் வலியுறுத்துகிறது.
மிக இளைய வயதில் மறைந்து விட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் தந்தை பெரியாரின் கொள்ளு பேரணமாகிய திருமகன் ஈவேராவின் மறைவிற்கு இந்த கூட்டம் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. டாஸ்மாக் மதுவை முற்றிலுமாக ஒழித்து மது போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது. இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தாமரை யாசூப், மண்டல பொறுப்பாளர் அப்துல் சலாம், மாவட்ட தலைவர் ஷேக் முகமது, மத்திய மாவட்ட செயலாளர் இமாம் மொய்தீன், மாவட்ட பொருளாளர் இம்ரான் அலி, மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர் சலால், அஸ்தம்பட்டி பகுதி தலைவர் சபீர் அகமது, அஸ்தம்பட்டி பகுதி பொருளாளர் இஸ்மாயில், மமக செயலாளர் ஷாஜகான், அம்மாபேட்டை பகுதி செயலாளர் ஓ எஸ் பாபு, தமுமுக வெல்டிங் பாபு மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.